பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2013

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி, நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
ஆட்கடத்தல்கள் தொடர்பில் 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் காத்திரமான முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படும் நபர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு;ள்ளது.
பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு துஸ்பிரயோகங்களில் சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.