பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2013

வடமாகாண சபை தேர்தலுக்கு எதிரான தேசிய சுதந்திர முன்னணியின் கையெழுத்து வேட்டையில் ஜே.வி.பி?
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி நடத்தும் கையெழுத்து சேகரிப்பு நிகழ்வில், ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹபரணை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே இந்த பட்டியலில் கைச்சாத்திட்டுள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி வட மாகாண சபை தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் குறித்த தேர்தலை நடத்தக்கூடாதென  அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, இந்த கையெழுத்துக்களை சேகரித்து வருகிறது.
இது இன்றையதினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த கையெழுத்து பட்டியலில் ஜே.வி.பியின் உறுப்பினரும் கையெழுத்திட்டுள்ளார்.