பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2013

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் காணி விற்பனை செய்ய தடை
இலங்கையில் அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்யும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 
இதன் பிரகாரம், பரிசு, விற்பனை, நன்கொடை உள்ளிட்ட எவ்விதத்திலேனும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது. இதற்கு இனி சட்டத்தில் இடமில்லை.
இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளை குத்தகைக்கு விடுவார்களாயின் குத்தகைக்கு விடும் காலம் அதிகபட்சம் 99 ஆண்டுகள் மாத்திரமேயாகும் எனவும் ஜனாதிபதியின் அந்த யோசனையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.