பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2013

டான் யாழ் ஒளியின் உரிமையாளர் எஸ் எஸ் குகநாதனின் வலது கை எனப்படுபவரும்  அதன் நிர்வாகியும் முன்னாள் புலிகளின் பிரமுகருமான  தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட  தீர்மானம்
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தீர்மானித்துள்ளதாக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் சார்பில் தயா மாஸ்டர் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் யாழ். மாநகர உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் உட்பட 23பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.