பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2013

காஸா நிலப்பரப்பின் நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை இதனைப் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
 
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகளில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
 
பலஸ்தீன மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இலங்கை பூரண ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
 
பலஸ்தீனத்தின் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
 
இஸ்ரேலுடன் அமைதியான முறையில் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
 
பிராந்திய வலயத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஏனையோரின் வாழும் உரிமையை மதித்து செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.