பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச்
செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஜனாதிபதியே தொலைபேசியில் அழைத்து, நீதி நிலைநாட்டப்படும் என தெரிவித்துள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டில் நீதியில்லை என்பது புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மகளுக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியை உண்மையில் பிரதேச அரசியல்வாதி பாராட்டியிருக்க வேண்டுமே தவிர, தண்டித்திருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.