பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2013

தினேஷ் கார்த்திக் அதிரடி: அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

ஐ.சி.சி சம்பியன்ஷிப் கிரிக்கெட் கிண்ண பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இன்றைய பயிற்சி போட்டி ஒன்றில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கியவர்கள் சொற்ற ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். மத்தியதர துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் டோனி மற்றும் தினேஷ் கார்திக் அபாரமாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணியை வலுவான பாதைக்கு இட்டுச் சென்றனர். தினேஷ் கார்திக் ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களையும் டோனி 91 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றது.
309 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது. இதன்படி 23.3 ஓவர்கள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.