பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2013

அவுஸ்திரேலிய புதிய பிரதமரானார் மீண்டும் கெவின் ரூட்: வாக்கெடுப்பில் கிலலார்ட் தோல்வி
அவுஸ்திரேலியாவில் புதிய பிரதமருக்காக நடந்த வாக்கெடுப்பில் கெவி்ன் ரூட்டிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததால் ‌மீண்டும் பிரதமராக கெவின் ரூட் தெரிவு‌ செய்யப்பட்டார்.
கில்லார்ட் பதவி விலகுவதாக அறிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஜூலியா கில்லார்ட் பதவி வகித்து வந்தார்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டு பிரதமராக இதே தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவரான கெவின் ரூட் பதவி விலகியதை அடுத்து, ஜூலியா கில்லார்ட் பிரதமராக பொறுப்பேற்றார்.
அவுஸ்திரேலியாவில் சமீப காலமாக தொழிலாளர் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கில்லார்ட் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
இதையடுத்து பிரதமரை மாற்றுவதற்காக பாராளுமன்றத்தில் கூட்டம் நடந்தது.  அங்கு நடந்த விவாதத்தில் 72 எம்.பி.க்களை கொண்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான டோனி அபோட் கூறுகையில்,
புதிய அரசு அமையுங்கள் இல்லையெனில் பொதுத்தேர்தலை அறிவியுங்கள் என்றார்.
இதையடுத்து மக்கள் பிரதிநித்துவ ச‌பையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமரான கெவின் ரூட்டிற்கு ஆதரவாக 57 வாக்குகளும், கில்லார்ட்டுக்கு ஆதரவாக 45 வாக்குகளும் கிடைத்தன.
அவுஸ்திரேலிய பாராளுமன்றில் மொத்தம் ‌150 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் தொழிலாளர் கட்சிக்கு (லேபர் கட்சி ) 71 எம்.பி.க்கள் தான் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 76 எம்.பி..க்கள் தேவை என்பதால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கில்லார்ட் பிரதமராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் புதிய பிரதமருக்காக நடந்த வாக்கெடுப்பில் கெவி்ன்ரூட்டிற்கு ஆதரவாக அதிகமான வாக்குகள் கிடைத்ததால் ‌மீண்டும் பிரதமராக கெவின் ரூட் தேர்வு‌ செய்யப்பட்டார். கில்லார்ட் பதவி விலகுவதாக அறிவித்தார்.
புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள கெவின் ரூட் (57)  கூறுகையி்ல், அவுஸ்திரேலியாவில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தல் நடைபெறும் என்றார்.