பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2013

உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ{க்கும் அவரது பயிற்சியாளர் பெட்ரிக் மௌரட்டோவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் இருவரும் நெருக்கமாகக் காணப்பட்டதனையடுத்தே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.


மகளிர் ஒற்றையர் பிரிவில் 16, இரட்டையரில் 13 என மொத்தம் 29 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள செரீனா வில்லியம்ஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் தோல்வியடைந்ததினையடுத்து பெட்ரிக்கை (வயது 42) பயிற்சியாளர் ஆக்கினார்.

இவரது வருகை செரீனாவுக்கு மீண்டும் வெற்றிப்பாதையை காட்டியது. 2012 இல் விம்பிள்டன், லண்டன் ஒலிம்பிக், யு.எஸ்.ஓபன், 2013 இல் பிரெஞ்ச் ஓபன் என, அனைத்தி லும் பட்டம் வென்று அசத்தினார் செரடீனா. கடைசியாக பங்கேற்ற 31 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

இந்நிலையிலேயே, இருவருக்குமிடையில் காதல் மலர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து செரீனா கருத்துத் தெரிவிக்கையில்,

டென்னிஸ் குறித்து இருவருக்குமே தெரியும் என்பதால் தான், பெரும்பாலான விடயங்களில் எங்களுக்குள் ஒத்து போகிறது. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் என அவர் தெரிவித்தார்.