பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2013

இலங்கைத் தம்பதியினரின் கடத்தலுக்கு திட்டமிட்ட நபர் லண்டனில் கைது
சென்னையில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இலங்கை- பிரித்தானியா தம்பதியரின் கடத்தல் தொடர்பில், லண்டனில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களின் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய அஜந்தன் என்ற 22 வயதான குறித்த நபர், டோரஸ்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த கடத்தல் சென்னையில் இடம்பெற்ற போதும், அது இங்கிலாந்தில் வைத்தே திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ பொலிடன் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன் இது தொடர்பில் இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் பிரித்தானிய மெட்ரோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி