பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2013

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வம் வந்ததால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 


கட்சியினர் வெளியே கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டிந்தனர். அருகே உள்ள டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த தேனி நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், அல்லிநகர கூட்டுறவு சங்க துணைத் தலைவருமான மகாராஜன்,  கூட்டுறவு சங்க தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள் என அதிமுகவினரை குற்றம் சாட்டியுள்ளார். 
அப்போது, தேனி நகராட்சி சேர்மன் ஆதரவாளர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றியதும், மகாராசனை தாக்கியுள்ளனர். காயம் அடைந்த மகாராசன், ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து பேச வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்குள் ஓடியுள்ளார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்ததும், அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை சமாதானப்படுத்திய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்த சம்பவம் பற்றி கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுத உள்ளதாக மகாராசன் தெரிவித்தார். எதிர் கோஷ்டியினரும் கடிதம் எழுத தயாராகிவிட்டனர்.

வாக்குவாதம், அடிதடி போன்ற சம்பவங்களால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பு, பதட்டத்துன் காணப்பட்டது.,