பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2013

நயீனாதீவுக் கடலில் இராட்ச திமிங்கலம் கரையொதுங்கியது
நயினாதீவு வங்களாவடிக் கடலில் இராட்சத திமிங்கல வகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரையில் ஒதுங்கியுள்ளது.
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலைச் சூழ்நிலையில் கடலின் அலையில் அடிப்பட்ட நிலையில் இம் மீனானது கரைக்கு வந்துள்ளது.
சுமார்  25 அடி நீளமும் 6 அடிக்கும் அதிகமான அகலத்தையும்
கொண்ட இம் மீனானது கடலின் கரையில் ஒதுங்கியுள்ளது.
இதனை உடனடியாக பொது மக்களுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் இன்றி அழிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.