பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2013

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார்.
பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்து, அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.
மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது.
இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.