பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2013

வாகனத்தால் மோதி ஒருவரை கொலை செய்த வெளிநாட்டு வாழ் தமிழரை காப்பாற்ற முயற்சிக்கும் பொலிஸார
முல்லைத்தீவு –முள்ளியவளை வித்தியானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் வாகனத்தால் மோதி ஒருவரை கொன்று, மற்றொருவரை படுகாயப்படுத்தி
ய வெளிநாட்டு நபர் ஒருவரை படையினரும், பொலிஸாரும் காப்பாற்ற முயல்வதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்றிரவு 8மணியளவில் ஹயஸ் வாகனத்தில் அதிக மது போதையில் வந்த வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இருவரை மோதியுள்ளார்.
சம்பவத்தில் ஒருவர் வாகனத்தின் முன்பக்க பாதுகாப்பு பகுதியில் சிக்குண்டு சுமார் 500 மீற்றர் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் விபத்தின்போது தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வாகனத்தின் சாரதியான வெளிநாட்டவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை சட்டத்திலிருந்து காப்பாற்ற அவரது உறவினர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு பொலிஸாரும் படையினரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு உடந்தையாக செயற்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.