பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2013



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதனால் மீண்டும் அழைப்பாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை பிறப்பிக்குமாறு மேல் நீதிமன்ற நீதவான் குமுதினி விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவத் தலைமையகத்தில் சரத் பொன்சேகா மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் செல்வராஜா கிருபாகரன் எனப்படும் அலினயார் மொஹமட் நிஸ்தார் லத்தீப், சண்முகம் சூரியகுமார் மற்றும் தம்பய்யா பீ. தனுஷ் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.