பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2013

ஸ்காபுரோவில் இடம்பெற்ற தமிழனின் கொலை தொடர்பில் கண்காணிப்பு ஒளிப்படம் வெளியிட்ட பொலிஸ்! (video)

நேற்றைய தினம் ஸ்கார்போரோவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் பொலிசார் இன்று கண்காணிப்பு ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நேற்று மதியம் 3 மணி அளவில் வீட்டு பின்புறம் வேலையில் ஈடுபட்டிருந்த 37 வயது நிரம்பிய சுரேந்திரா வைத்திலிங்கம் என்னும் நபரை, மூன்று நபர்கள் கொண்ட குழுவொன்று நடந்து வந்து சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது, இச்சம்பவம் Morningside மற்றும் Mantis வீதிகள் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையில் நடைபெற்றது.
கொலையுண்ட நபரின் வீட்டிற்கு அருகாமையில் இருந்த வீடொன்றின் கண்காணிப்பு கமெராவில் கொலையாளிகள் என சந்தேக படுவோர் நடந்து செல்வதும், கொலைக்கு பின்னர் ஓடுவதும் பதிவாகி உள்ளது. இதனை காவல் துறையினர் இன்று வெளியிட்டனர்.
ஏற்கனவே காவல் துறையினர் கொடுத்த தகவலின்படி, கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்க படும் நபர்கள் இருவர் கறுப்பு தோற்றத்தை கொண்டவர்கள் எனவும் மற்றையவர் ஒருவர் பழுப்பு நிறத்தவர் எனவும் தெரிய வருகிறது. இக்கொலை சம்பவம் பற்றியோ, கொலையாளிகள் பற்றியோ தகவல் அறிந்தவர்கள் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.
toronto-300x187