பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: சேரன்மகாதேவியில் தேமுதிகவினர் 143 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் போலீஸ் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் 143 பே
ர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி 3 டி.எஸ்.பி. தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கலவரப் பகுதியில் பயன்படுத்தும் வஜ்ரா, அருண் வாகனங்கள் கொண்டு வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு பொய் வழக்குப் போடுவதை கண்டித்து தேமுதிக சார்பில் வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சேரன்மகாதேவியில் பஸ் நிலையம் அருகில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.
போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவித்தது. இதையடுத்து சேரன்மகாதேவியில் பஸ் நிலையம் , பழைய பஸ் நிலையம், ஆர்.சி. பள்ளி அருகில், போக்குவரத்து வளைவுப் பகுதியில்டி.எஸ்.பி.க்கள் மணிமாறன், பாலசுப்பிரமணியன், விக்னேஷ்சாந்தாராம் ஆகியோர் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கலவரப்
பகுதியில் ஈடுபடுத்தப்படும் வஜ்ரா, அருண் ஆகிய வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.
களக்காடு, அம்பை, முக்கூடல் பகுதியில் இருந்து சேரன்மகாதேவி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த தேமுதிகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் சேரன்மகாதேவியில் முன் கூட்டியே 25 பேரை கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாவட்ட செயலர் கே. கணேஷ்குமார்ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீஸார் சேரன்மகாதேவி ரவுண்டானாவில் தடுத்து நிறுத்தினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து போலீஸாருடன் தேமுதிகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தேமுதிகவினரை ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதித்தனர். இதையடுத்து பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலர் கணேஷ்குமார்ஆதித்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர்கள் ஐயப்பன், பொன்னரசு, அவைத் தலைவர் துரைவேலன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் செல்வகுமார், மாவட்ட மகளிரணி செயலர் இந்திராணி,
துணை செயலர்கள் கமலம், முத்துமாரி, பொருளாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், தங்கசாமி, நகர செயலர்கள் முத்துபாண்டி, அன்வர்உசேன், அம்சத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலமாக வந்த அவர்கள் மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து போலீஸார் கைது செய்தனர். 17 பெண்கள் உள்பட 143 பேர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.