பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2013

யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013யேர்மனியில் நடைபெற்றுவரும்  மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக,  கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப்  போட்டிகள் நடைபெற்றன.

ஆரம்ப நிகழ்வாக யேர்மனியத் தேசியக்கொடியை, தமிழர்  கூட்டமைப்பின் பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி, ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் அவர்களாலும், தமிழாலயத்தின் கொடி, கல்விப்  பொறுப்பாளர் அவர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது.
பின்னதாக தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. தனிப்போட்டிகள், குழுப்போட்டிகள், குண்டெறிதல்,ஒப்பனையும் பாவனையும், கயிறுழுத்தல், ஆகியன இடம்பெற்றன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் , வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டு, மாலை 19:00 மணியளவில் போட்டிகள் நிறைவுபெற்றன.
போட்டிகளின் முடிவில் ;
எசன்  தமிழாலயம் 514 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும்,
மெயபுஷ் தமிழாலயம் 484 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும்
நொய்ஸ் தமிழாலயம் 372 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும்
முன்சென்கிளாட்பாக் தமிழாலயம் 211 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.