பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2013

பிரான்சில் முஸ்லிம்கள் போராட்டம்: 20 கார்கள் எரிந்து சாம்பலானது

பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து தலைநகர் பாரிசில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பர்தா அணிந்து வந்த பெண்ணை காவல்துறையினர் கண்டித்தனர்.
இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் பொலிசை தாக்கினார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவரை விடுவிக்கும்படி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது கார்களை தீ வைத்து கொளுத்தியதில், 20 கார்கள் எரிந்து சாம்பல் ஆனது.
பின்னர் போராட்டக்காரார்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.