பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கு மத்தியிலான வேட்பாளர் பங்கீடு நாளை திங்கட்கிழமை முடிவு செய்யப்படுமெனவும் வேட்பாளர்களின் பெயர்பட்டியல் 25ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமெனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி  தெரிவித்தார்.
கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் பங்கீடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட வேட்பாளர் பங்கீட்டில் கட்சிகள் மத்தியில் இழுபறி நிலை காணப்படுகிறது. இருந்தும்
நாளை நண்பகலுக்கு முன்னர் வேட்பாளர் பங்கீடு பூர்த்தி செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், டெலோ, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேட்பாளர் எண்ணிக்கை கீழே தரப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டம்
தமிழரசுக் கட்சி- 7
ஈ.பி.ஆர்.எல்.எப் - 4
டெலோ - 3
தமிழர் விடுதலை கூட்டணி - 2
புளொட் - 2
கிளிநொச்சி மாவட்டம்
தமிழரசுக் கட்சி- 3
தமிழர் விடுதலை கூட்டணி -2
டெலோ - 1
ஈ.பி.ஆர்.எல்.எப் -1
முல்லைத்தீவு மாவட்டம்
தமிழரசுக் கட்சி - 2
டெலோ - 2
ஈ.பி.ஆர்.எல்.எப் - 2
தமிழர் விடுதலை முன்னணி - 1
புளொட் - 1