பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூலை, 2013

மும்பையில் விபசாரம் செய்த இந்தி நடிகைகள் கைது

மும்பையில் விபசாரம் செய்த இந்தி மற்றும் போஜ்பூரி நடிகைகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை கோகந்த்வாலாவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் விபசாரம் நடப்பதாக பொலிசாருக்கு புகார் வந்தது.
இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில், விபசாரத்தில் ஈடுபட்டு வந்த 5 நடிகைகள் மற்றும் அவர்களின் தரகர் இம்தியாஸ் கான் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இந்தியில் நாடகங்களிலும், போஜ்புரி மற்றும் சி கிரேட் படங்களிலும் நடித்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்ததும், வாடிக்கையாளர் போன்று இம்தியாஸை அணுகினோம்.
முதலில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு நடிகைக்கு ரூ.1 லட்சம் கேட்ட இம்தியாஸ் பிறகு ரூ.25,000க்கு நடிகையை அனுப்ப ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து நாங்கள் அந்த வீட்டுக்கு சென்ற உடன் வாடிக்கையாளர் என்று நினைத்து நடிகை ஒருவர் வெளியே வந்தார்.
அப்போது நாங்கள் வீட்டை சோதனை செய்து அவர்களை கைது செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.