பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2013

97 பேருடன் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களின் படகு மூழ்கியது! 88 பேர் மீட்பு! குழந்தை ஒன்று பலி
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இலங்கையர்கள் உட்பட்ட 97 பேருடன் பயணித்த படகு விபத்துக்குள்ளானது. இதில் 88 பேர் காப்பாற்றப்பட்டனர். மீட்பாளர்களால் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடும் அலைகளுக்கு மத்தியில் பயணித்த இந்த படகு நேற்று காலை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடற்பகுதியில் விபத்துள்ளானதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜோன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
அலையில் மோதுண்ட படகு கடலில் மூழ்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.