பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2013

.

அமைச்சர் திஸ்ஸ விதாரண இல்லாத தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது: புளொட் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சிறிதரன்
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் அமைச்சர் திஸ்ஸ விதாரண இல்லாத தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.பத்மநாபா அணியின் செயலாளர் எஸ்.சிறிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் திஸ்ஸ விதாரணவை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணியின் செயலாளர் எஸ்.சிறிதரன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போதே இவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தினை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை தடுப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண, தானும் தனது கட்சியும் மற்றும் இடதுசாரி கட்சிகளும் 13வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதை தடுக்க தீவிரமாக செயற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் வட மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.