பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2013

கலைஞர் மீதான அவதூறு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முரசொலி பத்திரிகையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார். 


இது முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக குறிப்பிட்டுள்ளதாக கூறி கலைஞர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திய லிங்கம் ஆகியோரை பற்றி கலைஞர் அறிக்கை வெளியிட்டது. இதில், இரு அமைச்சர்களை பற்றி அவதூறு கருத்துக்கள் தெரிவித்துள்ளதாக கலைஞர் மீது கிரிமினல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 13–ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.