பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

முதல்வர் கருணாநிதி பற்றி வாலி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

உண்ணி மேனன், திப்பு, ஹரிச்சந்திரன், தேவன், விஜயகோபால், சின்மயி, சாருலதா, மதுமிதா, திவ்யா, நேஹா, நஷிதா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடுகின்றனர்.
தமிழ்த் திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவின்போது இந்தப் பாடல் பாடப்படும்.
இந்தப் பாடல் பாடப்படும்போது, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத் குமார் உள்ளிட்டோரும் சேர்ந்து பாடுவார்கள் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அந்தப் பாடல்:
வா! வா! தலைவா!
வணக்கம்! வணக்கம்! – நீ
வந்தால் எங்கள்
வாழ்வு மணக்கும்!
வெள்ளை நிறத்து வேட்டியிலே
கறுப்பு சிவப்புக் கரையிருக்க…
நீல நிறத்துக் கண்ணாடி
கண்களின் மேலே
கொலுவிருக்க…
மஞ்சள் நிறத்து
மேல்துண் டணிந்த
பச்சைச் தமிழே! வருக! எங்கள்
இச்சைத் தமிழே! வருக!