பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூலை, 2013

நளினி நாளை வேலூர் கோர்ட்டில் ஆஜராகிறார்
 ராஜீவ்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நளினி நாளை வேலூர் சிறையில் போலீசாரால் ஆஜர் படுத்த உள்ளார். 


வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் அறையை சிறை கண்காணிப்பாளர் ராஜ லெட்சுமி 2010ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி சோதனை நடத்தினார். சோதனையில் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
 இது குறித்த வழக்கில் இவர் நாளை வேலூர் 1வது மாஜிஸ்திரட் மும்மூர்த்தி நேரில் ஆஜராக உத்தர விட்டார். இவர் கோர்ட்டில் ஆஜராவதில் சட்ட சிக்கல் இருப்பதாக தெரிவித்த போலீசார், வீடியோ கான்பி ரசிங் மூலம் விசாரிக்க பரிந்துரை செய்தனர்.
சிறையில் உள்ள வீடியோ சிஷ்டம் வேலை செய்யாத காரணத்தால், மாஜிஸ்திரேட் நளினியை ‌கோர்ட்டில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டார். இவர் உத்தரவின் பேரில் வேலூர் டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்புடன் வேலூர் கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.