பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2013

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக அதிகமாக போராடியது மதிமுக தான் :வைகோ
ஈரோட்டில் இன்று இரவு நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.36 லட்சம் தேர்தல் நிதியை  மதிமுக
பொதுச்செயலர் வைகோ பெற்றுக் கொண்டார்.


பின்னர் அவர் பேசியபோது,  ’’ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகவும், தாய் தமிழர்களின் உரிமைக்காகவும் அதிகமாக போராடியது மதிமுக தான். மத்திய பிரதேச மாநிலம் வரை போய் ராஜபக்சே வருகையை எதிர்த்து போராடிய துணிவும், நெஞ்சுரமும் மதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு.

 ஈழம் உருவாக பொதுவாக்கெடுப்பு தான் தீர்வு என முதலில் குரல் கொடுத்தது மதிமுக தான். விடுதலைப் புலிகளை  நேற்றும், இன்றும், நாளையும் ஆதரிப்பேன் என நீதிமனறத்தில் தைரியமாக வாக்குமூலம் கொடுத்துள்ளேன்’’என்று தெரிவித்தார்.