பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2013

பிள்ளையுடன் பிச்சையெடு​த்த தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்ப​ட்டுள்ளார்
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தைப் பிள்ளையுடன் பிச்சையெடுத்த தாய் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பஸ் நிலையப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தைப் பிள்ளையுடன் கடந்த சில நாட்களாக நாற்பது வயது மதிக்கத் தக்க பெண் கொதிக்கும் வெய்யிலில் பிள்ளையையும் கொண்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று நண்பகல் பஸ் நிலையத்திற்கு வந்த யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்கள் குறிப்பிட்ட பெண்ணைப் பல நூற்றுக் கணக்கான பொது மக்கள் முன்னிலையில் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண் இன்று யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.