மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மும்முனை கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய நான்காவது போட்டியில் இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய
தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சிகர் தவான் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் ஆரம்ப விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். தவான் 69 ஓட்டங்களுடனும் , சர்மா 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்