பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2013

,

பரிதி இளம்வழுதி மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கடந்த வாரத்தில் திமுகவில் இருந்து விலகி ஜெய லலிதா முன்னிலையில் அதிமுகவில்
இணைந்தார்.  இந்நிலையில் திமுகவில் இருக்கும் பரிதி இளம் வழுதியின் மகன் இளம்சுருதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


சென்னை அயனாவரம் கூட்டத்தில், வடசென்னை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும்,  பரிதி இளம்வழுதி மகனுமான இளம்சுருதி கடந்த 1ம் தேதி ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. 
இதையடுத்து இளம்சுருதி  மீது அச்சுறுத்தல், கொலைமிரட்டல், நற்பெயருக்கு, களங்கம் ஏற்படுத்துதல் என்பன உட்பட  6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.  
இன்று மாலை அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய  சிறையில் அடைக் கப்பட்டார். 
சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமனியம் உட்பட திமுக பிரமுகர்கள் வந்திருந்தனர்.