பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2013

,

நாளை கொழும்பில்
அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. 
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் நாளை பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் க.பிறேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசியல் உயர்பீடம் ஒன்றை நிறுவுதல், அதன் கீழான தலைமைக்குழு, நிதிக்குழு, தேர்தல் குழு, அரசியல் விவகாரங்களுக்கான குழு உள்ளிட்ட நிர்வாக பொறிமுறையை ஏற்படுத்தி, இறுதி முடிவை வரையறை செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியான ஒரு சக்தி மிக்க ஸ்தாபனமாக மாற்றி அமைப்பது தொடர்பிலும், வடமாகாண சபை தேர்தலில் யாரை முதன்மை வேட்பாளராக நியமிப்பது மற்றும் வட மாகாண சபை தேர்தலை வெற்றி கொள்வதற்கான உபாயங்களை வகுப்பது உள்ளிட்ட இலக்குகளை அடையும் ஒரு விசேட கலந்துரையாடலாகவே நாளைய கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.