பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2013

திருமாவளவனுக்கு அனுமதி மறுப்பு : தடையை மீறிவிடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், தர்மபுரி இளவரசன்  மர ணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், கவுரவ கொலைகளை
தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.  இதையடுத்து தடையை மீறி அறிவித்தபடி இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  திருமாவளவன் இந்த ஆர்ப்பாட் டத்திற்கு தலைமையேற்கவில்லை; பங்கேற்கவும் இல்லை.  பாவரசு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ்.பாலாஜி, இரா.செல்வம், யூசுப், விடுதலைசெழியன், பாலசிங்கம் உட்பட கட்சியினர் 500 பேர் பங்கேற்றனர்.
அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 500 பேரையும் காவல்துறை கைது செய்தது.  கைது செய்யப்பட்ட அனைவரும் சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.