பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2013

முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

மழை பெய்ததால் தடைபட்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நேற்றைய போட்டி இன்று தொடருகிறது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணித்தலைவர் பொல்லார்டு களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இலங்கை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்யவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த போட்டி இன்று மீண்டும் தொடர்ந்துள்ளது. இலங்கை அணி 60 ஓட்டங்களுடன் மீண்டும் துடுப்பெடுத்தாடி வருகிறது.