பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2013


இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு: எய்ம்ஸ் டாக்டர் குப்தா
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இளவரசனின் உடல் மறுபரிசோதனை செய்யப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மறுபரிசோதனை செய்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் பரத்வாஜ், கபிர்குமார், குப்தா, மேலோடெபின் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி மறுபரிசோதனைக்குப் பின்னர் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது என்று டாக்டர் குப்தா தெரிவித்தார். மறுபரிசோதனை அறிக்கையை சீல் வைத்து உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.