பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2013

கடிகார ஏற்றுமதியில் முன்னேற்றம் கண்டுள்ள சுவிஸ்

சுவிஸ் நாட்டில் கடிகார ஏற்றுமதியானது இந்த ஆண்டு ஒரு சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என சுங்கவரி துறை(Federal Customs Office) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 0.3 சதவீதம் வீழ்ச்சியை ஏற்றுமதி துறையில் சுவிஸ் நாடானது சந்தித்துள்ள நிலையில் 2013ம் ஆண்டின் ஏற்றுமதியில் 2.9 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ஒட்டுமொத்த தொழில் ஏற்றுமதி வளர்ச்சியானது குறைந்து காணப்படுகின்றது. பிப்ரவரி, மே, மற்றும் ஜீன் ஆகிய மாதங்களில் மட்டும் 3 சதவீதம் குறைந்துள்ளதாக சுவிஸ் நாட்டின் கடிகார தொழில் துறை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் ஏற்றுமதி அதிகரிப்பிற்கு வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஏற்றுமதி துறைகளில் உணவு, மது மற்றும் புகையிலை ஆகியன அதிகமான இலாபத்தினை ஈட்டித்தந்தன.
2011ம் ஆண்டில் சுவிஸ் ஏற்றுமதிக்கு அந்நாட்டின் தேசிய வங்கியானது மிகவும் ஆதரவாக இருந்தது. ஆனால் 2013ம் ஆண்டில் ஆரம்ப மாதங்களில் ஐரோப்பிய நாட்டின் வர்த்தக தொடர்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான ரியூட்டர்ஸ்(Reuters) கூறியுள்ளார்.
தற்போது நாட்டின் வணிக ஆய்வு குறிப்புகள் குறித்த ஒரு பார்வையில் இந்த ஏற்றுமதியானது மூன்றாவது காலாண்டில் சற்று சிறப்பாக அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சுவிஸ் நாட்டின் ஏற்றுமதிகளை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுடன் கையெழுத்திடப்பட்டுள்ளன என ரியூட்டர்ஸ்(Reuters) கூறியுள்ளார்.