பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2013


கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த பெண்கள் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு ஒல்கோட் மாவத்தை, ரயில் நிலையம் அருகில் மற்றும் குணசிங்கபுர பகுதிகளில் இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.