பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2013

இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு கைவிரல் அடையாளம் அறிமுகம்!- 155 வருட தந்திச் சேவை நிறுத்தப்பட உள்ளது
இலங்கை கடவுச்சீட்டுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கைவிரல் அடையாளமிடும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கான மொத்த செலவு 677 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 629 மில்லியன் ரூபாவை அவுஸ்திரேலியா நன்கொடையாக வழங்கவுள்ளது.
மேற்படி புதிய நடைமுறை திட்டத்தை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடைமுறைப்படுத்த உள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்ததுடன் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.