பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2013

கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: 2 பொலிஸார் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி- பதற்ற நிலை நீடிப்பு

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான கிரான்ட்பாஸ் ஸ்வர்ன மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது அண்டைய வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக உத்தியோகப்பற்றற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிரான்ட்பாஸ் பகுதியில் பதற்ற நிலைமை தெடர்கின்றது
கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன தெரிவிழத்துள்ளார்.
இதனால் அப்பகுதி எங்கும் பதற்ற நிலைமை தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிரான்ட்ஸ்பாஸ் ஸ்வர்ன மாவத்தையில் பள்ளிவாசல் ஒன்று இயங்கி வந்தது. பாதை விரிவாக்கப் பணிகள் காரணமாக குறித்த பள்ளிவாசல் வேறு ஒரு இடத்தில் இயங்கி வந்தது.
பௌத்த சாசன அமைச்சு புனித ரமழான் தொழுகைகளுக்காக 30 நாட்களுக்கு இந்த இடத்தை வழங்கியிருந்தது. இந்த இடத்தை விட்டு வெளியேறாது தொடர்ந்தும் தொழுகைகளுக்காக இடத்தைப் பயன்படுத்தியமையினால் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இடத்தைக் காலி செய்யுமாறு கோரி சிலர் கற்களை வீசி எறிந்து எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை. அண்டைய வீடுகளுக்கும் கற்கள் வீசப்படுவதனால் பிரதேசத்தில் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் சிங்கள ராவய அமைப்பினால் இப் பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.