பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2013

இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் மக்கள் காணாமல் போகவில்லை: கோத்தபாய நிராகரிப்பு
வடபகுதியில் படையினரால் அதிகளவிலான மக்கள் காணாமல் போயுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின், காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று சந்தித்த போது, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன் சில அமைப்புகள் கூறுவது போல் வடக்கில் இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிப்பதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.
அரசாங்கம், யூனிசெப், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல அமைப்புகள் நடத்திய எந்த விசாரணைகளிலும் இந்த தகவல் தெரியவரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சுமத்தியிருந்தன.
இதற்கான சாட்சியங்களை அந்த அமைப்புகள் வெளியிட்டிருந்துடன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி தனது இரண்டு விவரணப்படங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.