பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2013

மணிப்பூர் மேற்கு இம்பாலில் சுதந்திர தின விழா நடந்த இடம் அருகே குண்டுவெடிப்பு
நாட்டின் 67வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுக்கு மத்தியிலும் மணிப்பூரில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்துள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சுதந்திர தின விழா நடைபெறும் மொய்ரான்ச்கோம் பகுதிக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக யருக்கும் காயமில்லை என கூறப்படுகிறது.