ஐந்து புலி ஆதரவாளர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய ஐந்து பேர் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரே இவ்வாறு புலி உறுப்பினர்களை அரசியலில் களமிறக்கியுள்ளார்.
குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதி புலிகளின் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான தீபனின் நெருங்கிய உறவினர் என திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தியும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. |