பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2013

அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்தார்! காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தும் என உறுதி
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள யு.என்.சி.எச்.ஆர் காரியாலயத்தில் வைத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அனந்தியுடன் நவிபிள்ளை சில நிமிடங்கள்  மட்டுமே கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காரியாலயத்தில் வைத்து பல்வேறு சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதன் போது காணாமல் போன தங்களுடைய உறவுகளை தேடித்தருமாறு தாயொருவர் கண்ணீருடன் மன்றாடியுள்ளார்.
அவரை கட்டியணைத்த நவிபிள்ளை உங்களுடைய நிலைமைகளை நானறிவேன் என்று தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.