பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2013

முன்னாள் இராஜதந்திரியும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலகவிற்கு டெய்லி நியூஸ் ஊடகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டில் இடம்பெற்றதனைப் போன்று தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்று
மீண்டும் வன்முறைகள் இடம்பெற வேண்டுமென தயான் பிரார்த்தனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச ஊடகங்கள் தமிழர்களை அச்சுறுத்துவதாக தயான் ஜயதிலக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெய்லி நியூஸ் ஊடகம் தயானின் கருத்திற்கு கடுமையான எதிர்ப்பை தனது ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளது.
தயான் எவ்வளவு முயற்சித்தாலும் அவ்வாறான வன்முறைகள் மீள இடம்பெறாது என டெய்லி நியூஸ் ஊடகத்தின் ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க தெரிவித்துள்ளார்.