பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

மன்னார் ஆயருக்கு நவநீதம்பிள்ளை அழைப்பு – இன்று கொழும்பில் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மன்னார் ஆயர் வண.இராயப்பு யொசெவ் இன்று சந்தித்துப் பேசவுள்ளார். 

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

வன்னி, மன்னார் பிராந்தியத்தின் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக, கலந்துரையாடுவதற்கே, மன்னார் ஆயருக்கு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, மீள்குடியமர்வு, காணாமற்போனோர், அரசியல் கைதிகள் விவகாரங்கள் உள்ளிட்ட போருக்குப் பிந்திய சூழலில் எதிர்நோக்கப்படும் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து, நவநீதம்பிள்ளையிடம் மன்னார் ஆயர் விபரித்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.