பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2013

அரசுடன் இணையும் மற்றுமொரு ஐ.தே.கட்சியின் எம்.பி?
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தில் இணைய உள்ளதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவித்தன.
கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நடைபெற்ற பல கலந்துரையாடல்களில் சம்பந்தப்பட்டிருந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்பொழுது அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புடன் பேசி வருவதாக அறிய கிடைத்துள்ளது.
அதேவேளை வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் வடபகுதியின் பிரதான கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் சிலரும் அரசுடன் இணைய உள்ளதாக அரசின் அந்த உள்வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.