பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2013

கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான சுவர்ண சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் இப்பகுதிகளுக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொல்லுகள், போத்தல்கள் கொண்டு தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும், இதனால் பலர் காயமடைந்துள்ளதோடு வீடுகள் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த பதற்ற நிலை தொடருமானால் இன்றும் 12 மணிநேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிராண்ட்பாஸில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படுவதாக இலங்கையின் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு அந்தப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்று காலை நீக்கப்பட்டது.
எனினும் இன்று பகலும் அங்கு பதற்ற நிலை தோன்றியதை அடுத்தே அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.