பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2013

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் 4 ஒரு
நாள் போட்டிகளிலும் எளிதாக வெற்றிகளை அள்ளிய இந்திய அணி கடைசி நாள் போட்டியில் அந்த அணியை புலவாயோ மைதானத்தில் சந்தித்தது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 39.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 34 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.இந்திய வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.