பக்கங்கள்

பக்கங்கள்

9 ஆக., 2013


மருத்துவ உலகில் அதிசயம் :
விழுப்புரம் குழந்தைக்கு
தீப்பிடித்து எரியும் அபூர்வ நோய்!
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கர்ணன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை யின் உடலில் அடிக்கடி தீப்பற்றிக் கொள்வதாகக் கூறப்பட்டது.



இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை பரிசோதித்த குழந்தைகள் நல பேராசிரியர் நாராயணபாபு, குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் அதி சயம். இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்கனவே சில நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுவே முதல் முறை.
கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 குழந்தைகளுக்கு இந்த நோய் இருந்துள்ளது. இவர்களது உடலில் இருந்து வெளியேறும் ஆல்கஹால் எனப்படும் வாயுவால், உடலில் தீப்பற்றிக் கொள்கிறது.
இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது வரை சோதனையிலேயே உள்ளது. எனினும், குழந்தையை பாதுகாப்பாக வைக்க வேண்டும். எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை குழந்தையின் அருகில் வைக்கக் கூடாது. தீக்காயங்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.