பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2013

மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு எண்களை வெளியிட்டது தேர்தல் திணைக்களம்!- சூடு பிடிக்கிறது பிரசாரக் களம்!
மாகாண சபைத் தேர்தலுக்கான கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் விருப்பு எண்கள் சற்று முன்னர் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
வடமாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில் விருப்பு வாக்கு எண்கள் இன்றா நாளையா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை விருப்பு வாக்கு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விருப்பு வாக்கு தொடர்பான எண்கள் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு பதிவுத் தபாலில் அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை இன்று இரவு முதல் தேர்தல் பிரச்சாரப் பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.