பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2013

வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் அடித்துக் கொலை!- சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் எஸ். இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை கலை மீட்கப்பட்டுள்ளார் என யாழ்.சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் வடமாகாண சபைத் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மாவட்டத்தில் முதல் உயிர் கொலை செய்யப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்களில் இரண்டாவது வன்முறைச் சம்பவம் என யாழ்.பொலிஸ் தலமையகம் குறிப்பிட்டுள்ளது.